3 நாட்களுக்குள் சுற்றுப்புறத்தை தூய்மைப் படுத்த உத்தரவு
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்ரமணியன் மூன்று தினங்களுக்குள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையாக, ஆட்சியர் இல.சுப்ரமணியன் டெங்கு ஆய்வு பணியை மேற்கொண்டார். அப்போது கொசு உற்பத்திக்குக் காரணமாக இருக்கும் பொருட்களை அகற்றி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும் என்று அம்மாவட்டத்தில் உள்ள அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த பணியை அனைவரும் 3 தினங்களுக்குள் செய்து முடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தவறும் பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் அபராதம் விதிக்கப்படும் எனவும் சுப்ரமணியன் அதிரடியாக அறிவித்துள்ளார்.