\
எம்.எல்.ஏ. பிரபு மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு!

எம்.எல்.ஏ. பிரபு மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு!

எம்.எல்.ஏ. பிரபு மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு!
Published on

காதல் திருமணம் செய்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபுவின் மனைவி சௌந்தர்யாவை நாளை ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிரபு, தான் காதலித்து வந்த சௌந்தர்யா என்ற கல்லூரி பெண்ணை கடந்த 5-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். 

இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சௌந்தர்யாவின் தந்தை சாமிநாதன் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து மகள் சௌந்தர்யாவை கடத்திச்சென்று கட்டாய திருமணம் செய்துவிட்டதாக சாமிநாதன் குற்றஞ்சாட்டியிருந்தார்.

19 வயது நிரம்பாத தனது மகளை கடத்திச் சென்று பிரபு திருமணம் செய்ததாக சுவாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் காதல் திருமணம் செய்த கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபுவின் மனைவி சௌந்தர்யாவை நாளை மதியம்  ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

முன்னதாக தன்னை யாரும் கடத்தவில்லை என்று பிரபுவின் மனைவி சௌந்தர்யா நேற்று முன்தினம் வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com