திருப்புவனம் அஜித் குமார்
திருப்புவனம் அஜித் குமார்pt

சிவகங்கை லாக்கப் மரணம் எதிரொலி.. காவல்துறையில் தனிப்படைகளை கலைக்க உத்தரவு!

சிவகங்கை திருப்புவனம் அஜித்குமார் காவல் நிலைய மரணத்தின் எதிரொலியாக காவல்துறையில் தனிப்படைகளை கலைக்க உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
Published on

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித் குமார் என்ற இளைஞரை தனிப்படை போலீசார் அடித்து கொலை செய்த விவகாரத்தின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள தனிப்படைகளை உடனடியாக கலைக்க DGP தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனிப்படைகளை கலைக்க உத்தரவு..

நகை காணாமல் போனதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித்குமார், தனிப்படை காவலர்களின் கொடூர தாக்குதல் காரணமாக உயிரிழந்தது தமிழகத்தையே உலுக்கியது. இந்த சூழலில் காவல்துறையில் உள்ள தனிப்படைகளை கலைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட மறு உத்தரவு வரும்வரை தனிப்படைகளை கலைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்புவனம் அஜித் குமார்
திருப்புவனம் அஜித் குமார்

தற்போது மண்டல ஐஜிகள் மற்றும் மாநகர காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் வழக்கு விசாரணையில் உள்ள தனிப்படை போலீசார் வழக்கை முடித்துவிட்டு அவரவர் காவல் நிலையம் திரும்ப உத்தரவு.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் அடங்கிய தனிப்படையும் அனுபவம் இல்லாத காவலர்களை தனிப்படையில் சேர்க்கக்கூடாது எனவும் மாறுதலாக உள்ள மறு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com