மாமல்லபுர ரேடிசன் ப்ளூ ரிசார்ட்டை இடிக்க உத்தரவு

மாமல்லபுர ரேடிசன் ப்ளூ ரிசார்ட்டை இடிக்க உத்தரவு

மாமல்லபுர ரேடிசன் ப்ளூ ரிசார்ட்டை இடிக்க உத்தரவு
Published on

மாமல்லபுரத்தில் கடலோர மண்டல ஒழுங்கு முறை விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள ரேடிசன் ப்ளூ ரிசார்ட்டை இடிக்க தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ரேடிசன் ப்ளூ ரிசார்ட் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக மீனவர் நலச்சங்க தலைவர் செல்வராஜ் குமார் என்பவர் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை இடிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் ரேடிசன் ப்ளூ நிறுவனத்தால் கட்டப்பட்ட கட்டடங்களை 2 மாதங்களுக்குள் அந்நிறுவனமே இடித்து அகற்ற வேண்டும் என்றும், இல்லை என்றால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அகற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடாக தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு ரேடிசன் ப்ளூ 10 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டடங்களை வரைமுறைப்படுத்த மத்திய அரசை அணுக ரிசார்ட் நிர்வாகத்துக்கு அனுமதியளித்துள்ள தீர்ப்பாயம், அதுவரை அந்த கட்டுமானங்களை பயன்படுத்தக் கூடாது எனவும் தெளிவுப்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com