வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டுமா?: உயர்நீதிமன்றம் புதிய ஆணை

வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டுமா?: உயர்நீதிமன்றம் புதிய ஆணை

வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டுமா?: உயர்நீதிமன்றம் புதிய ஆணை
Published on

கல்வி நிலையம், அலுவலகங்களில் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்ற உத்தரவில் மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் புதிய ஆணை பிறப்பித்துள்ளது.

ஆசிரியர் தேர்வில் கேட்கப்பட்ட வந்தே மாதரம் எந்த மொழியில் இயற்றப்பட்டது என்ற கேள்வி தொடர்பாக பட்டதாரி ஆசிரியர் கே.வீரமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். வந்தேமாதரம் இயற்றப்பட்டது வங்காள மொழியா அல்லது சமஸ்கிருதமா என்ற சந்தேகம் எழுந்ததன் அடிப்படையில், இந்த வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இந்த வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதி அதிர்ச்சிகரமான உத்தரவை பிறப்பித்தார். பள்ளி, கல்லூரிகளில் வாரம் ஒருமுறையாவது வந்தே மாதரம் பாடலைக் கட்டாயம் பாட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். 

நீதிபதி தனது உத்தரவில், "வந்தே மாதரத்தைப் பள்ளி, கல்லூரிகளில் பாடாததால்தான் இந்தக் குழப்பம் ஏற்பட்டது. எனவே, பள்ளி, கல்லூரிகளில் வாரம் ஒருமுறையாவது வந்தே மாதரம் பாடலைக் கட்டாயம் பாட வேண்டும். செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் பாடலாம். அரசு, தனியார் நிறுவனங்களில் மாதம் ஒரு முறை வந்தே மாதரம் பாடலைப் பாட வேண்டும். சமஸ்கிருதம், வங்கத்தில் பாட விருப்பமில்லாத பட்சத்தில் தமிழில் மொழிபெயர்த்து பாடலாம். வந்தே மாதரம் பாடலை பாட விருப்பமில்லாதோர் மீது எவ்வித அழுத்தத்தையும் கொடுக்கக் கூடாது" என்று தெரிவித்தார். 

இந்த உத்தரவை எதிர்த்து இருநீதிபதிகள் கொண்ட அமர்வில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கல்வி நிலையம், அலுவலங்களில் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்ற உத்தரவில் மாற்றம் செய்து உத்தரவிட்டனர். வந்தேமாதம் பாடலை கட்டாயம் பாடுவது குறித்து அரசு தான் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com