சிதம்பரம் கனகசபை மண்டபத்திற்குள் அனுமதிக்க கோரிய போராட்டத்துக்கு தடைகேட்ட வழக்கில் உத்தரவு

சிதம்பரம் கனகசபை மண்டபத்திற்குள் அனுமதிக்க கோரிய போராட்டத்துக்கு தடைகேட்ட வழக்கில் உத்தரவு
சிதம்பரம் கனகசபை மண்டபத்திற்குள் அனுமதிக்க கோரிய போராட்டத்துக்கு தடைகேட்ட வழக்கில் உத்தரவு

சிதம்பரம் நடராஜர் ஆலய கனக சபை மண்டபத்திற்குள் அனுமதிக்கக்கோரி போராட்டம் நடத்த தடை விதிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர், சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் நின்று தரிசனம் செய்ய அனுமதி கோரி ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி சிதம்பரத்தை சேர்ந்த ராமநாதன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.



அந்த மனுவில், தீட்சிதர்களை விரும்பாத ஒரு குழுவினர், தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதாகவும்,   கோவில் வளாகத்திற்கு அருகில் போராட்டம் நடத்தி கோவிலுக்கு வருபவர்களுக்கு இடையூறு விளைவிப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக, கனகசபை மண்டபத்தை திறக்குமாறு மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோரை வற்புறுத்துவதாகவும், இது அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடராஜர் ஆலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போராட்டம் நடத்த அனுமதிக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், மேலும் கோவில் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என பொது தீட்சிதர் செயலாளருக்கும், விருத்தாச்சலத்தை சேர்ந்த மக்கள் அதிகாரம் அமைப்பினருக்கும் உத்தரவிடவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.



இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், வழக்கு குறித்து தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com