பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்: மோடி பெயரில் தங்கத்தேர் இழுத்து ஓபிஎஸ் வழிபாடு!

பழனி முருகன் கோயிலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்து, பிரதமர் நரேந்திர மோடி பெயரில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்தினார்.
OPS
OPSpt desk

செய்தியாளர் - அஜ்மீர் ராஜா

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய நேற்று பழனிக்கு வருகை தந்தார். அடிவாரத்தில் தனியார் விடுதியில் ஓய்வெடுத்த அவரை கட்சியின் நகர நிர்வாகிகள் வரவேற்றனர்.

OPS
OPSpt desk

பின்னர் மாலையில் ரோப்கார் மூலம் மலைக்குச் சென்ற அவர் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை இராஜ அலங்காரத்தில் சுவாமி தரிசனம் செய்ததோடு தங்கத்தேர் புறப்பாட்டிலும் பங்கேற்றார்.

தங்கத் தேரானது அவரது பெயரிலும், பிரதமர் மோடி பெயரிலும் பணம் செலுத்தி இழுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவருக்கு திருக்கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக அதிமுக கொடி, லெட்டர் பேட், இரட்டைஇலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நீதிமன்றம் நிரந்தர தடை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் புன்னகைத்தபடியே ஓபிஎஸ் சென்று விட்டார்.

OPS
ஓபிஎஸ்-க்கு மீண்டும் பின்னடைவு: அதிமுக-வின் பெயர், கொடி ஆகியவற்றை பயன்படுத்த நீதிமன்றம் நிரந்தர தடை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com