தமிழ்நாடு
"ஓபிஎஸ் அண்ணன் போனில் வாழ்த்து சொன்னார்" - அண்ணாமலை
"ஓபிஎஸ் அண்ணன் போனில் வாழ்த்து சொன்னார்" - அண்ணாமலை
தமிழக பாஜகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அண்ணாமலைக்கு ஓபிஎஸ், போனில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
தமிழக பாஜகவின் புதிய தலைவராக, விருப்ப ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியும் பாஜக துணைத்தலைவருமான அண்ணாமலை புதிதாக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு பலத்தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், இன்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், அண்ணாமலைக்கு போனில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள, அண்ணாமலை ” அண்ணன் ஓபிஎஸ் அவர்கள், தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துகள் தெரிவித்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள். இன்றுபோல் என்றும் அதிமுக, பாஜகவின் தோழமையும், தமிழர் வளமும் வளரட்டும்” என்று நன்றி தெரிவித்திருக்கிறார்.