ஓ.பன்னீர்செல்வம் விரைவில் முதலமைச்சராக பதவியேற்பார் என அவரது ஆதரவாளரான செம்மலை எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கூடவே இருந்து சசிகலா குடும்பம் சதி செய்து விட்டது. தற்போது சசிகலாவின் குடும்பத்தை ஜெயலலிதாவின் ஆன்மா தண்டித்து வருகிறது. இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கே தினகரன் லஞ்சம் கொடுக்க முயற்சி செய்திருப்பது வெட்ககேடானது.
ஓ.பன்னீர்செல்வம் விரைவில் முதலமைச்சராக பதவியேற்பார். நாம் நினைத்தது படிப்படியாக நடக்கும் என்று அவர் தெரிவித்தார்.