\
கருணாநிதி இல்லத்துக்கு ஓபிஎஸ், தமிழக அமைச்சர்கள் வருகை

கருணாநிதி இல்லத்துக்கு ஓபிஎஸ், தமிழக அமைச்சர்கள் வருகை

கருணாநிதி இல்லத்துக்கு ஓபிஎஸ், தமிழக அமைச்சர்கள் வருகை
Published on

திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு துணை முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் சென்றுள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டது. அதில், திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கருணாநிதியின் உடல்நலத்தில் வயது காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது என்றும் கருணாநிதியை 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது. வீட்டிலேயே அதற்கான மருத்துவ வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. கருணாநிதியின் உடல்நிலையை கவனத்தில் கொண்டு அவரை யாரும் பார்க்க வர வேண்டாம் என்றும் காவேரி மருத்துவமனை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு துணை முதலமைச்சர் ஓபிஎஸ் சென்றுள்ளார். கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு ஓபிஎஸ், தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகியோர் சென்றுள்ளனர். கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க அவர்கள்  அங்கு சென்றுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com