பாறைகளாக இருப்பதால் துளையிடுவது சற்று சிரமமாக உள்ளது - ஓபிஎஸ் ட்வீட்

பாறைகளாக இருப்பதால் துளையிடுவது சற்று சிரமமாக உள்ளது - ஓபிஎஸ் ட்வீட்
பாறைகளாக இருப்பதால் துளையிடுவது சற்று சிரமமாக உள்ளது - ஓபிஎஸ் ட்வீட்

துளை போடும் பகுதியில் மிகவும் கடுமையான பாறைகளாக இருப்பதால் துளையிடுவது சற்று சிரமமாக உள்ளது என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

திருச்சி மணப்பாறையில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணி நான்காவது நாளாக நடைபெற்று வருகிறது. குழந்தை விழுந்த ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகே ரிக் இயந்திரம் மூலம் துளையிடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மீட்பு பணிகள் குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “நடுக்காட்டுப்பட்டியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதும் முழுவீச்சில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு அமைச்சர்கள் குழு, மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை, தேசிய பேரிடர் மீட்பு பணி குழு, மாநில பேரிடர் மீட்பு பணி குழு, தீயணைப்புத் துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய்த்துறை என அனைத்து துறைகளும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

துளை போடும் பகுதியில் மிகவும் கடுமையான பாறைகளாக இருப்பதால் துளையிடுவது சற்று சிரமமாக உள்ளது. இருந்த போதிலும் தற்போது ஒருமணி நேரத்திற்கு கிட்டத்தட்ட 10 அடி ஆழம் துளையிடும் நவீன இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. குழந்தை #surjeeth பாதுகாப்பாக விரைவில் மீட்பதற்குண்டான அனைத்து பணிகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com