தடை விதித்த நீதிமன்றம்.. அதிமுக கொடி பொறுத்தப்படாத கார்-ல் பயணம் செய்த OPS

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அதிமுக கொடி பொருத்தப்படாத காரில் பயணம் செய்தார்.
அதிமுக கொடி
அதிமுக கொடி புதிய தலைமுறை

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அதிமுக கொடி பொருத்தப்படாத காரில் பயணம் செய்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர், அதிமுக கொடி பொருத்தப்படாத காரில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம் முகநூல்

அதிமுகவின் பெயர், கட்சியின் கொடியை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சூழலில் சிங்கப்பூரில் இருந்து திரும்பிய அவருக்கு, சென்னை விமான நிலையத்தில் ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அங்கு அதிமுக கொடி இல்லாமல் நின்ற தமது காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். அதிமுக கொடி, பெயரை பயன்படுத்தக்கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஒ. பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், இன்று தமது ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com