\
மக்கள் நலக்கூட்டியக்கத்தின் ஆதரவைக் கோரும் ஓபிஎஸ் அணி

மக்கள் நலக்கூட்டியக்கத்தின் ஆதரவைக் கோரும் ஓபிஎஸ் அணி

மக்கள் நலக்கூட்டியக்கத்தின் ஆதரவைக் கோரும் ஓபிஎஸ் அணி
Published on: 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மக்கள் நலக்கூட்டியக்கத்தின் ஆதரவைக் கோர ஓ.பன்னீர்செல்வம் அணியினர் திட்டமிட்டுள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் போட்டியிட பல்வேறு கட்சிகளும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அதிமுகவின் இரு அணிகளுமே தேர்தலில் களம்காண முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில், மக்கள் நலக்கூட்டியக்கத்தின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோர ஓபிஎஸ் தலைமையிலான அணியினர் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பான சந்திப்பு இன்று மாலை நடைபெற உள்ளது. இதனிடையே தற்போது நடைபெற்று வரும் பினாமி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com