\
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதியில் ஒட்டப்பட்டுள்ள ஓபிஎஸ் ஆதரவு போஸ்டர்கள்!

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதியில் ஒட்டப்பட்டுள்ள ஓபிஎஸ் ஆதரவு போஸ்டர்கள்!

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதியில் ஒட்டப்பட்டுள்ள ஓபிஎஸ் ஆதரவு போஸ்டர்கள்!
Published on

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் சொந்த தொகுதியில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுகவின் முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பையா மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் தலைமை பதவியை ஏற்க ஓ.பன்னீர்செல்வம் வர வேண்டுமென சுவரொட்டிகள் ஒட்டி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தற்போது விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ளார். அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளரான இவரது தொதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக முன்னாள் அதிமுக சேர்மன் சுப்பையா தலைமையிலான ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com