“நீதி, தர்மம், நியாயத்தின்பக்கம் நிற்க வேண்டும்” ஓபிஎஸ் பேச்சு!
சென்னை வேப்பேரியில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஓபிஎஸ் அணியின் தலைமை கழகம் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் மனோஜ் பாண்டியன், ஐயப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “தமிழக மக்களின் ஆதரவையும் அன்பையும் பெறுவதற்கு மூலக் காரணமாக இருப்பது நீதி, தர்மம், நியாயம். நாம் அவற்றின்பக்கம் நிற்க வேண்டும்.

கழகத்தில் நம்பிக்கை துரோகிகளுக்கு, ஒரு புரட்சித் தொண்டனாக நின்று நாம் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் என்று தமிழ் மக்கள் உணர்ந்துள்ளார்கள். நமக்கென்று நாளிதழ் வேண்டுமென்று தொண்டர்கள் கோரிக்கை வைத்தார்கள். கோரிக்கை ஏற்கப்பட்டு நமது புரட்சித் தொண்டன் என்ற நாளிதழ் உங்களால் உருவாக்கப்பட்டது. அதன் ஆசிரியர் பொறுப்பை மருது அழகுராஜ் ஏற்றுள்ளார்.
உறுதியாக புரட்சித் தொண்டன் நாளிதழ் தொண்டர்களைக் கடந்து தமிழக மக்களின் இதயங்களில் நிரந்தர இடத்தை பெறும் என்பதில் உறுதியான நம்பிக்கை உள்ளது” என்றார்.