\
சோதனை நடத்த நாங்கள் தூண்டவில்லை: ஓபிஎஸ்

சோதனை நடத்த நாங்கள் தூண்டவில்லை: ஓபிஎஸ்

சோதனை நடத்த நாங்கள் தூண்டவில்லை: ஓபிஎஸ்
Published on

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டதில் எங்கள் தரப்பு தூண்டுதல் எதுவுமில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லம் மற்றும் புதுக்கோட்டையில் அவருக்கு சொந்தமான குவாரி, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் 12 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

வருமானவரித்துறை மேற்கொண்ட சோதனைக்கு ஓபிஎஸ் தரப்பின் தூண்டுதல்தான் காரணம் என டிடிவி தினகரன் அணியினர் குற்றம்சாட்டினர். இதற்கு பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம் சோதனைக்கு நாங்கள் காரணமில்லை எனக் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com