தமிழக அரசு அறிக்கையை வாபஸ் பெற வேண்டும்: ஓபிஎஸ் பேச்சு

தமிழக அரசு அறிக்கையை வாபஸ் பெற வேண்டும்: ஓபிஎஸ் பேச்சு
தமிழக அரசு அறிக்கையை வாபஸ் பெற வேண்டும்: ஓபிஎஸ் பேச்சு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையைத் திரும்பப் பெறவில்லை என்றால் வழக்குத் தொடரப்படும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக மத்திய அரசு விசாரணை கோரி ஓபிஎஸ் அணியினர் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். போராட்டத்தின் முடிவில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா இறந்த பின்னரே தமக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகப் பேசினார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக தமிழக அரசு சார்பில் சுகாதாரத் துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறிய ஓபிஎஸ், அந்த அறிக்கையைத் திரும்பப் பெறாவிட்டால் வழக்குத் தொடரப்போவதாகவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com