தமிழ்நாடு
ஜெயலலிதாவின் ஆன்மா தமிழகத்தைக் காக்கும்: ஓபிஎஸ்
ஜெயலலிதாவின் ஆன்மா தமிழகத்தைக் காக்கும்: ஓபிஎஸ்
ஜெயலலிதாவின் ஆன்மா இன்னும் உயிரோடுதான் இருக்கிறது; அது நிச்சயம் தமிழகத்தைக் காக்கும், நல்வழிப்படுத்தும் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் ஆன்மா தமிழகத்தை காக்கும். நடந்துகொண்டிருக்கும் ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடரும் என்று தெரிவித்தார். அதுவே நமது நோக்கம் என்று தெரிவித்த அவர், நல்லாதரவு தந்த அனைவருக்கும் நன்றி. எதிர்கட்சி, மாற்றுக்கட்சி யாருடைய ஆதரவுடன் ஜெயலலிதாவின் ஆட்சி நிச்சயம் தொடரும். சட்டம், ஒழுங்கை காக்கும் வகையில் நம்முடைய பணிகள் தொடர வேண்டும் என்றும் கூறினார்.