6 ஆண்டுகளுக்கு பின் ஓபிஎஸ் கையில் எடுக்கும் வழக்கு! அரசியல் ஆயுதமா?

கோடநாடு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
ஓபிஎஸ் - வைத்திலிங்கம்
ஓபிஎஸ் - வைத்திலிங்கம்புதிய தலைமுறை

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது முதல் கட்டமாக செய்தியாளரிடம் பேசிய வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வத்தின் அறிக்கையை படித்தார்.

அந்த அறிக்கையில், “கோடநாடு கொலை வழக்கு குற்றவாளி யார்? கோடநாடு பண்ணை பங்களா, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் ஓய்விடம் இல்லை. அது அவர்களின் முகாம் அலுவலகம். கோடநாடு கொலை வழக்கு விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஆகவே வருகிற 01.08.2023 காலை 10.30 மணிக்கு கோடநாடு கொலை வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து தமிழ்நாடு முழுவதும் வருவாய் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும்” என இருந்தது. வைத்திலிங்கம் வாசிக்க, இந்த போராட்ட அறிவிப்பு ஓபிஎஸ் தரப்பில் வெளியிடப்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை இன்றைய தினம் அங்கீகரித்துள்ள நிலையில் தற்போது ஓபிஎஸ் போராட்டத்தை அறிவித்துள்ளது, அரசியல் ஆயுதமா என்ற கோணத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஓபிஎஸ் - வைத்திலிங்கம்
‘அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி’ - தேர்தல் ஆணையம் அங்கீகாரம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com