பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படாவிட்டால் 10% இட ஒதுக்கீட்டை ஏற்போம் - ஓபிஎஸ்

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படாவிட்டால் 10% இட ஒதுக்கீட்டை ஏற்போம் - ஓபிஎஸ்

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படாவிட்டால் 10% இட ஒதுக்கீட்டை ஏற்போம் - ஓபிஎஸ்
Published on

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு பாதிப்பு ஏற்படாவிட்டால் 10% இட ஒதுக்கீட்டை ஏற்போம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்

முன்னேறிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு  தொடர்பாக சென்னையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு கட்சிகளும் இந்த விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டினை தெரிவித்தன. 

திமுக, திராவிடர் கழகம், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 16 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. கருணாஸ், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாஜக, காங்கிரஸ், புதிய தமிழகம், கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்தன.

இதனையடுத்து, 10 சதவீதம் இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசு நல்ல முடிவு எடுக்கும் என ஓபிஎஸ் தெரிவித்தார்.

இந்நிலையில் இட ஒதுக்கீடு கொடுப்பது தொடர்பாக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார். அதில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டால்  10% இட ஒதுக்கீட்டை நிராகரிப்போம் எனவும்,  பாதிப்பு ஏற்படாவிட்டால் 10% இட ஒதுக்கீட்டை ஏற்போம் எனவும் தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com