"சசிகலா பூரண குணமடைய வேண்டும்" - ஓபிஎஸ் இளைய மகன் ஜெயபிரதீப்
’கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலா பூரண குணமடைய வேண்டும்’ என்று ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனைப் பெற்று கடந்த நான்கு ஆண்டுகளாக பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா நேற்று விடுதலை ஆனார். விடுதலைக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் தற்போது பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் “கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அம்மையார் சசிகலா நடராஜன் அவர்கள் பூரண குணமடைந்து இனிவரும் காலங்களில் நல்ல உடல்நலம் பெற்று அறம் சார்ந்த பணியில் கவனம் செலுத்தி மன நிம்மதியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்று அக்கறையோடு அறிக்கை விட்டவர் “இது அரசியல் சார்ந்த பதிவு அல்ல. என் மனதில் தோன்றிய மனிதாபிமானம் சார்ந்த பதிவு” என்று குறிப்பிட்டுள்ளார்.