தமிழ்நாடு
ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தைக்கு சசிகலா அணி குழு அமைப்பு
ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தைக்கு சசிகலா அணி குழு அமைப்பு
அதிமுகவின் இரு அணிகளும் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த சசிகலா அணி குழு அமைத்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனி, பெரியகுளத்தில் இருக்கும் அவர், அதிமுகவின் இரு அணிகளும் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த சசிகலா அணி குழு அமைத்துள்ளது. கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்திடம் சென்று விடக்கூடாது என்பதற்காக சசிகலா அணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது என அவர் தெரிவித்தார். இந்நிலையில் தேனி சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை திரும்புகிறார். அதன்பிறகு அ.தி.மு.க.வின் இரு அணிகள் இணைப்பு குறித்து அடுத்தக்கட்ட நகர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.