எம்ஜிஆர் சொந்த அண்ணனையே கட்சிக்குள் அனுமதிக்கவில்லை: பன்னீர் செல்வம்
ஒரு குடும்பத்தின் பிடிக்குள் கட்சியோ ஆட்சியோ இருக்கக் கூடாது என்ற எம்ஜிஆர், ஜெயலலிதாவின் அடிப்படைக் கொள்கையில் மாற்றம் இருக்கக் கூடாது என்று ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
எம்ஜிஆர் தனது அண்ணனையே கட்சிக்குள் அனுமதிக்கவில்லை என்று கூறினார். ஜெயலலிதாவும் குடும்ப ஆட்சியை ஏற்றுக் கொள்ளவில்லை.
எம்.ஜி.ஆர் 1972 ஆம் ஆண்டு அதிமுகவைத் தொடங்கி தொண்டர்கள் இயக்கமாக நடத்தித்தான் மூன்றுமுறை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து நல்லாட்சியை வழங்கினார். அதன்பிறகு 29 ஆண்டு காலம் அதிமுகவின் பொதுச்செயலாளராக எம்.ஜிஆர் உருவாக்கித் தந்த வழியில் தியாகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் கட்சியை வழிநடத்தியவர் ஜெயலலிதா. எத்தனையோ சோதனைகள் வந்தபோதும் மக்கள் நலனையும், தொண்டர்களின் நலனையும் கருத்தில் கொண்டு கட்சியையும் ஆட்சியையும் நடத்தி வந்தார்.
ஒரு குடும்பத்தின் பிடிக்குள் கட்சி செல்லக் கூடாது என்ற அவர்களின் கொள்கையைக் கடைப்பிடிப்பதுதான் அவர்களுக்கு நாம் செய்யும் நன்றி என்றும், அதை மாற்றுவது அவர்களுக்கு செய்யும் துரோகம் என்றும் பன்னீர் செல்வம் கூறினார்.