குருப்பெயர்ச்சியை முன்னிட்டு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காளியம்மன் கோயிலில் சிறப்பு யாக பூஜையில் பங்கேற்று வழிபாடு செய்தார்.
தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சிறப்பு யாக பூஜை வழிபாட்டில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். அவருடன் தேனி பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.