\
தனியாருக்கு விற்கப்பட்ட ஓபிஎஸ் கிணறு: கிராம மக்கள் அவசர ஆலோசனை

தனியாருக்கு விற்கப்பட்ட ஓபிஎஸ் கிணறு: கிராம மக்கள் அவசர ஆலோசனை

தனியாருக்கு விற்கப்பட்ட ஓபிஎஸ் கிணறு: கிராம மக்கள் அவசர ஆலோசனை
Published on

தேனி மாவட்டம் லெட்சுமிபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சொந்தமான கிணறு தனியாருக்கு விற்கப்பட்டது. இதனால் அங்குள்ள மக்கள் அவசரமாக ஆலோசனை நடத்திவருகின்றனர்.

லெட்சுமிபுரம் கிராம மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தி வந்த கிணற்றின் அருகே, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ராட்சதக் கிணறு தோண்டப்பட்டது. இதனால் அக்கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், மக்கள் போராட்டத்தையடுத்து 13 ஆம் தேதி சமரச கூட்டம் நடைபெற்றது. அப்போது கிணறு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உத்திரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்தினம் கிணறு மற்றும் நிலம் அதே கிராமத்தைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து லெட்சுமிபுரம் கிராமக் கமிட்டி கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com