தமிழ்நாடு
துணை முதலமைச்சர் ஓபிஎஸுக்கு 'தங்க தமிழ் மகன்' விருது
துணை முதலமைச்சர் ஓபிஎஸுக்கு 'தங்க தமிழ் மகன்' விருது
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓபிஎஸுக்கு சிகாகோ உலக தமிழ்ச் சங்கம் சார்பில் தங்க தமிழ்மகன் விருது வழங்கப்பட்டது.
சிகாகோ ஓக் புரூக் டெரஸில், 10 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிறப்பாக முடிந்தமைக்கான பாராட்டு விழா நடைபெற்றது. அதில் துணை முதலைச்சர் பன்னீர் செல்வத்திற்கு தங்க தமிழ் மகன் விருது அளிக்கப்பட்டது. விழாவின்போது ராஜா கிருஷ்ணமூர்த்தி, சாம்பர்க் மேயர் டாம் டெய்லி , ஓக்ப்ரூக் மேயர் கோபால் ஆல் மலானி, தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் மற்றும் உலக தமிழ் இளைஞர் பேரவைத் தலைவர் டாக்டர் விஜய் பிரபாகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.