“வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல மின்சார சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி” ஓ.பி.எஸ். கண்டனம்

“வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல மின்சார சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி” ஓ.பி.எஸ். கண்டனம்

“வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல மின்சார சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி” ஓ.பி.எஸ். கண்டனம்
Published on

தமிழ்நாட்டில், மின் கட்டணம் தவிர பிற மின் சேவைகளுக்கு 18 விழுக்காடு ஜி.எஸ்.டி.வரி விதிக்கப்படுவதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியளிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், அதில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பதிவுக்கட்டணம், மின் இணைப்புக் கட்டணம், மீட்டர் கட்டணம், வளர்ச்சிக் கட்டணம் ஆகியவற்றுக்கு 18 விழுக்காடு ஜி.எஸ்.டி.வரி வசூலிக்கப்படுகிறது என்ற பத்திரிகை செய்தியை சுட்டிக்காட்டி உள்ளார்.

மேலும் 2017ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி ஜி.எஸ்.டி.வரி அமலுக்கு வந்ததில் இருந்து இதுநாள் வரை வசூலிக்கப்படாதவர்களிடமிருந்தும் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டி உள்ளார்.

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பொருட்கள் (ம) சேவைகள் வரி குறித்து எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது விமர்சனங்கள் வைத்துவிட்டு தற்போது முதலமைச்சராக பதவிக்கு வந்தபின் அதிமுக ஆட்சியில் பொருட்கள், சேவை வரி வசூலிக்காத இனங்களுக்கும் வரி வசூலிக்க உத்திரவிட்டு வருவது திமுகவின் இரட்டை நிலைப்பாட்டை தோலுரித்து காட்டுகிறது. <a href="https://t.co/qrlyPwmC4y">pic.twitter.com/qrlyPwmC4y</a></p>&mdash; O Panneerselvam (@OfficeOfOPS) <a href="https://twitter.com/OfficeOfOPS/status/1475035662856253442?ref_src=twsrc%5Etfw">December 26, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இந்த அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். ஆகவே, முதலமைச்சர் இப்பிரச்னையில் மௌனமாக இருக்காமல் உடனே தலையிட்டுத் மின் கட்டணங்களுக்கான ஜி.எஸ்.டி.வரி வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், நிரந்தரமாக ரத்து செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com