அமெரிக்க பயணத்தில் ரைசிங் ஸ்டார் விருது பெறவிருக்கும் ஓபிஎஸ்

அமெரிக்க பயணத்தில் ரைசிங் ஸ்டார் விருது பெறவிருக்கும் ஓபிஎஸ்

அமெரிக்க பயணத்தில் ரைசிங் ஸ்டார் விருது பெறவிருக்கும் ஓபிஎஸ்
Published on

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா செல்லும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு,  Global community oscars 2019 விழாவில்
International rising star of the year- Asia Award விருது வழங்கப்பட உள்ளது.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அமெரிக்கா பயணம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி நவ.8 முதல் நவ.17 வரை 10 நாட்கள் அரசு முறைப்பயணமாக ஓபிஎஸ் அமெரிக்கா செல்கிறார் . நவ.8-ஆம் தேதி காலை சென்னையில் இருந்து புறப்பட்டு சிகாகோ செல்கிறார் துணை முதல்வர் ஓபிஎஸ்.

நவ.9 சிகாகோவில் தமிழ்ச் சங்கம் சார்பில் நடத்தப்படும் குழந்தைகள் தின விழாவில் பங்கேற்கிறார். நவ.9 முதல் நவ.12 வரை சிகாகோவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஓபிஎஸ், நவ.13, 14-ஆம் தேதிகளில் வாஷிங்டனில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 16 தேதி- நியூயார்க் நகரம்  செல்லும் துணை முதலமைச்சர் 17-ம் தேதி மீண்டும் தமிழகம் திரும்புகிறார்.

இதனிடையே நவம்பர் 10-ஆம் தேதி American Multi Ethnic Coalition Inc., சார்பாக நடத்தப்படும் Global community Oscars 2019 விழாவில் International Rising star of the year- Asia award விருது துணை முதலமைச்சர் ஓபிஎஸ்க்கு வழங்கப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com