`ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில்...'- ஓபிஎஸ் கொடுத்த 2 வது கடிதம்! சபாநாயகர் முடிவு என்ன?

`ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில்...'- ஓபிஎஸ் கொடுத்த 2 வது கடிதம்! சபாநாயகர் முடிவு என்ன?
`ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில்...'- ஓபிஎஸ் கொடுத்த 2 வது கடிதம்! சபாநாயகர் முடிவு என்ன?

அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் சபாநாயகருக்கு இரண்டாவது முறையாக கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதம், பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த இடைக்கால தடைவிதித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டி எழுதப்பட்டுள்ளது. அதிமுவின் ஒருங்கிணைப்பாளர் தான் என்பதால், சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தன்னிடம் கலந்து ஆலோசிக்கவேண்டும் என்று கடிதத்தில் ஓபிஎஸ் தெரிவித்திருக்கிறார்.

ஒற்றை தலைமை சர்ச்சை தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றத்தல் நிலுவையில் உள்ளதால் அதிமுக சார்பாக சட்டமன்ற குழுக்களை மாற்றுவது தொடர்பாக மனுக்கள் வந்தால் நிராகரிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கடந்த ஜூலை மாதம் கடிதம் கொடுத்தார்.

இந்த நிலையில் ஈபிஎஸ் தரப்பு ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்குமாறும், புதிதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் நியமிக்க சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர். இரு கடிதங்களும் பரிசீலனையில் இருப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இரண்டாவது கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து சட்டப்பேரவைக் கூட்டம் 17 ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் சபாநாயகர் என்ன முடிவு எடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com