இரு அணி இணைப்பின் இழுபறிக்கு இதுதான் காரணமா?

இரு அணி இணைப்பின் இழுபறிக்கு இதுதான் காரணமா?
இரு அணி இணைப்பின் இழுபறிக்கு இதுதான் காரணமா?

அதிமுகவின் இரு அணிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை ‌நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் இழுபறி நிலையே நீடித்துவருகிறது. இரு அணிகள் தரப்பிலும் எப்போது, எங்கு பேச்சுவார்த்தை என்ற அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை.

அதிமுகவின் இரு அணிகளும் ஒரே அணியாக இணைவதற்கான முன் முயற்சிகள் இம்மாத தொடக்கத்தில் ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது. டிடிவி.தினகரன், தாமாக விலகுவதாக அறிவித்த நிலையில், உடனடியாக கடந்த வாரத்திலேயே பேச்சுவார்த்தை தொ‌டங்கும் என்று எதிர்பாக்கப்பட்டது. இந்தச்சூழலில், இரு அணிகள் தரப்பிலும் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் யார் அடுத்த அடியை முன்னெடுத்து வைப்பது யார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. அதே நேரத்தில் பேச்சுவார்த்தைக்கான இரண்டு நிபந்தனைகளான ஜெயலலிதா மரணத்தில் சிபிஐ விசாரணை, சசிகலா குடும்பத்தினரை அதிமுகவில் இருந்து நீக்க வேண்டும் என்பதை ஓபிஎஸ் தரப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பேச்சுவார்த்தைக்கு முன்பே நிபந்தனையா என்ற கேள்வியை எடப்பாடி பழனிசாமி அணி எழுப்பியுள்ளது.

இந்த நிலையில், எப்போது பேச்சுவார்த்தைக்கான இடம், தேதி, முடிவு செய்யப்படும்? என்ற கேள்விக்கு இதுவரை தெளிவான பதில் கிடைக்கவில்லை. டெல்லியில் டிடிவி.தினகரன் மீதான விசாரணை தொடரும் அதே வேளை இங்கு அதிமுக அணிகள் இணைப்பில் இழுபறி நீடிக்கிறது. ஆகவே, இந்த இரு நிகழ்விற்கும் சம்பந்தம் இருக்குமோ என தொண்டர்கள் மத்தியில் பேச்சுகள் எழுந்து வருகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com