படுகர் இன மக்களுடன் நடனமாடி மகிழ்ந்த ஓபிஎஸ்

நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், நீலகிரி மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் நேற்று பங்கேற்றார்.

அப்போது ஓ. பன்னீர்செல்வத்திற்கு பூரண கும்ப மரியாதையுடன், படுகர் இன பாரம்பரிய உடை அணிந்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோத்தகிரி டானிட்டன் பகுதியில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த ஓ. பன்னீர்செல்வம் படுகர் இன மக்களின் உடையில் பாரம்பரிய நடனமாடி
மகிழ்ந்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com