ஒன்றாக இணைய ஓபிஎஸ் வைக்கும் கோரிக்கைகள் என்னென்ன?
அதிமுக இரு அணிகளும் இணைவது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவு எம்.பி.க்களும், எம்.எல்.ஏக்களும் பங்கேற்றுள்ளனர். இரு தரப்பிலும் குழு அமைக்கப்பட்ட உடன் இரு
அணிகளின் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, பேச்சுவார்த்தையின் போது, ‘ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக வேண்டும். எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சராக இருக்கலாம்.
பொதுச்செயலாளரை தேர்வு செய்ய விரைவில் தேர்தல் நடத்த வேண்டும். அதுவரை கட்சியை வழி நடத்த 7 பேர் கொண்ட குழு அமைக்கலாம். பாஜக
தலைமையிலான கூட்டணியில் அதிமுக இணைய வேண்டும்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் தேவை. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை
அரசுடைமையாக்கி நினைவு இல்லம் ஆக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட முக்கிய நிபந்தனைகள் ஓபிஎஸ் தரப்பில் முன் வைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.