“பலத்தை நிரூபிக்க நானே களமிறங்குகிறேன்; ராமநாதபுரத்தில் போட்டி” - ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி

"பாஜகவில் உரிய அன்பும், அங்கீகாரமும் கிடைத்துள்ளது. எங்களுடைய பலத்தை நிரூபிக்கவே தனி சின்னத்தில் போட்டியிடுகின்றோம்" என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம் PT WEB

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். பாஜக மொத்த தொகுதி பங்கீட்டையும் அறிவித்த நிலையில், அவருக்கு தொகுதிகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை. அதனால் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "சுயேச்சை சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறேன். நானே அந்த களத்தில் நின்று என்னுடைய பலத்தை நிரூபிக்கவும், தொண்டர்கள் பலத்தை நிரூபிக்கவும் தனிச்சின்னத்தில் நிற்கிறோம்‌.

15க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜகவிடம் கேட்டோம் கிடைக்கவில்லை. பாஜகவில் உரிய அன்பும், அங்கீகாரமும் உள்ளது. இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காகத் தான் தேர்தலில் களம் இறங்குகிறேன். இரட்டை இலையை பெறுவதற்கு சட்டப்போராட்டம் நடத்தி வருகிறோம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com