தமிழ்நாடு
பேச்சுவார்த்தைக்கு 7 பேர் கொண்ட குழு அமைத்தது ஓபிஎஸ் அணி
பேச்சுவார்த்தைக்கு 7 பேர் கொண்ட குழு அமைத்தது ஓபிஎஸ் அணி
அதிமுகவின் இரண்டு அணிகளும் இணைவதற்கான முயற்சியில் பேச்சுவார்த்தை நடத்த ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில், பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன், ஜேசிடி பிரபாகர், மாஃபா பாண்டியராஜன், பிஹெச் மனோஜ்பாண்டியன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய செம்மலை இந்த தகவலை தெரிவித்தார்.
முன்னதாக, அதிமுக இரு அணிகள் இணைப்பு தொடர்பாக ஓ.பி.எஸ். அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த வைத்திலிங்கம் எம்பி தலைமையில் முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.