ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ், இளவரசி நாளை ஆஜர்

ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ், இளவரசி நாளை ஆஜர்
ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ், இளவரசி நாளை ஆஜர்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் உறவினர் இளவரசி ஆகியோர் திங்களன்று ஆஜராக உள்ளனர்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், இறுதிகட்ட விசாரணையில் ஈடுபட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசிக்கு கடந்த 2 வாரம் முன் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி ஓ.பன்னீர்செல்வமும், இளவரசியும் திங்கட்கிழமை ஆஜராக உள்ளனர்.



அப்பல்லோ மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை நடத்தி வரும் நிலையில், நாளைய விசாரணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நாளை காலை 10.30 மணிக்கு இளவரசியிடமும், ஓ.பன்னீர்செல்வத்திடம் 11.30 மணிக்கும் விசாரணை நடைபெற உள்ளது.

2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்த பின்னர், அவரின் மரணம் குறித்து விசாரிக்க 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் சசிகலா, சசிகலா உறவினர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள், அப்பல்லோ மருத்துவர்கள் உட்பட இதுவரை பலர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com