\
’’ஊடக விவாதங்களில் இனி அதிமுக பங்கேற்காது’’: ஓபிஎஸ் - இபிஎஸ் கூட்டறிக்கை

’’ஊடக விவாதங்களில் இனி அதிமுக பங்கேற்காது’’: ஓபிஎஸ் - இபிஎஸ் கூட்டறிக்கை

’’ஊடக விவாதங்களில் இனி அதிமுக பங்கேற்காது’’: ஓபிஎஸ் - இபிஎஸ் கூட்டறிக்கை
Published on

தொலைக்காட்சி, சமூகத் தொடர்பு ஊடக விவாதங்களில் இனி அதிமுக பங்கேற்காது என ஓபிஎஸ் - இபிஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், ’’மக்களின் அடிப்படைத் தேவைகள், தினசரி பிரச்னைகள் பல இருக்கின்றபோது, அதைப் பற்றியெல்லாம் சிறிதளவும் கவலைப்படாமல் ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாக இருக்கக்கூடிய ஊடக நிறுவனங்கள், அதிமுக-வின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், சிறுமைப்படுத்தும் நோக்கிலும், ஊடக அறத்திற்கு புறம்பாகவும், கழகத் தலைவர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதத்திலும் விவாதத் தலைப்புகளை வைத்து நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவது மனதிற்கு வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது.

எனவே ஊடக விவாதங்களில் அதிமுக சார்பில் யாரும் இனி பங்கேற்கமாட்டார்கள்’’ என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com