\
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும்: முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும்: முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும்: முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
Published on

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிப்பதற்காக பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்றும், விசாரணை முடிவில் நாட்டு மக்களுக்கு உண்மை தெரியவரும் என்றும் தெரிவித்தார். விசாரணை கமிஷன் அமைப்பது மாநில அரசின் கடமை என்று குறிப்பிட்ட பன்னீர்செல்வம், ஆளுநர் தமிழகத்துக்கு வந்தவுடன் அவரைச் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com