டெபாசிட் பெற முடியுமா? ஓ.பி.எஸ்-ஸுக்கு சவால்!

டெபாசிட் பெற முடியுமா? ஓ.பி.எஸ்-ஸுக்கு சவால்!
டெபாசிட் பெற முடியுமா? ஓ.பி.எஸ்-ஸுக்கு சவால்!

போடி சட்டப்பேரவைத் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் போட்டியிட்டு டெபாசிட் பெற முடியுமா? என்று அதிமுக அம்மா அணியின் நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் சவால் விடுத்து கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

இனி எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக அம்மா அணியினால் டெபாசிட் பெற முடியாது என்று பன்னீர்செல்வம் கூறியதால், அந்த கட்டுரையில் இவ்வாறு‌ கூறப்பட்டுள்ளது.

சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரைத் தொடர்ந்து திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டைரையும் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என கூறுவது வேடிக்கையாக இருப்பதாகவும் அந்தக் கட்டுரையில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com