புதிதாக மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு - எம்எல்ஏக்கள் தலைமையில் பொதுமக்கள் போராட்டம்

புதிதாக மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு - எம்எல்ஏக்கள் தலைமையில் பொதுமக்கள் போராட்டம்
புதிதாக மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு - எம்எல்ஏக்கள் தலைமையில் பொதுமக்கள் போராட்டம்

கோவை மாவட்டம் சேரன்மாநகரில் புதிதாக மதுபானக்கடை அமைக்க பொதுமக்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் எதிர்ப்பு தெரிவித்து போரட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சேரன்மாநகரில் ஏற்கனவே மதுபானக் கடை செயல்பட்டு வரும் நிலையில், அந்த கடைக்கு அருகே புதிதாக மதுபானக் கடை திறப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு அரசு மதுபான வாணிபக்கழக பொதுமேலாளரிடமும் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று புதிய மதுபானக் கடையில் மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்துள்ளனர். இதனையடுத்து புதிய கடைக்கு வந்த சிங்காநல்லூர் எம்எல்ஏ கே.ஆர்.ஜெயராமன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் கடையை மூடக்கோரி காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுக்குட்டி, அருண்குமார் ஆகியோர் காவல்துறை அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனையடுத்து மதுபானக் கடை திறக்கப்படாது என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில் சிங்காநல்லூர் அதிமுக எம்எல்ஏ கே.ஆர் ஜெயராமன் ஆபாச வார்த்தைகளால் பேசிய வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com