திமுகவை எதிர்ப்பது தான் அதிமுகவின் கொள்கை – முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

திமுகவை எதிர்ப்பது தான் அதிமுகவின் கொள்கை – முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
திமுகவை எதிர்ப்பது தான் அதிமுகவின் கொள்கை – முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

திமுகவை எதிர்ப்பது தான் அதிமுகவின் கொள்கை, திமுக எதிர்ப்பில் பிறந்ததுதான் அதிமுக என விராலிமலையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அதிமுக பொன்விழா நிறைவு தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். அப்போது...

திமுகவை எதிர்ப்பது தான் அதிமுகவின் கொள்கை. திமுக எதிர்ப்பில் பிறந்தது தான் அதிமுக. இந்த கட்சி இன்னும் 50 ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்திருக்கும் எம்ஜிஆர் மறைந்த போது இந்த கட்சி இனி நிலைத்திருக்குமா என்று பலர் எண்ணினர். அவர்களின் எண்ணத்தை பொய்யாக்கும் வகையில் ஜெயலலிதா மீண்டும் கட்சியை கையில் எடுத்து முதலமைச்சரானார்

அதேபோல் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் இந்த கட்சியின் நிலை குறித்து சிலர் விமர்சனம் செய்தார்கள். ஆனால், அதிமுக என்ற கட்சி இன்றும் வெற்றி நடை போடுகிறது. எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட இந்த கட்சி ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டது. வரும் காலங்களில் அவர்களை போல இன்னும் பல தலைவர்களை இந்த கட்சி உருவாக்கும் இது மக்களுக்கான கட்சி மக்களை நேசிக்கும் கட்சி என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com