\
சீன அதிபரின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு: சென்னையில் 8 திபெத்தியர்கள் கைது

சீன அதிபரின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு: சென்னையில் 8 திபெத்தியர்கள் கைது

சீன அதிபரின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு: சென்னையில் 8 திபெத்தியர்கள் கைது
Published on

சீன அதிபர் தமிழகம் வரும்போது போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்ததாக திபெத்தைச் சேர்ந்த 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அக்டோபர் 11-ஆம் தேதி மாமல்லபுரத்துக்கு வருகை தரும் சீன அதிபர் ஸி ஜின்பிங் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதற்காக சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சீன அதிபர் தமிழகம் வரும்போது அவருக்கு எதிராக போராட்டம் நடத்த திபெத் நாட்டைச் சேர்ந்த சிலர் திட்டமிட்டுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சென்னை கிழக்கு தாம்பரத்தில் தங்கியிருந்த ஒரு பெண் மற்றும் 2 மாணவர்கள் உள்பட திபெத்தைச் சேர்ந்த 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில் ஒருவர் சென்னைப் பல்கலைக்கழக மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. திபெத்தை சீனா ஆக்கிரமிப்பதாக குற்றம்சாட்டி ஸி ஜின்பிங் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க திபெத்தியர்கள் திட்டமிட்டிருந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com