ரயில் நிலையங்களில் காணாமல் போகும் குழந்தைகளை மீட்க 'ஆப்ரேசன் ஸ்மைல்' புதிய திட்டம்

ரயில் நிலையங்களில் காணாமல் போகும் குழந்தைகளை மீட்க 'ஆப்ரேசன் ஸ்மைல்' புதிய திட்டம்

ரயில் நிலையங்களில் காணாமல் போகும் குழந்தைகளை மீட்க 'ஆப்ரேசன் ஸ்மைல்' புதிய திட்டம்

திருச்சி ரயில்வே ஜங்சனில் 'ஆப்ரேசன் ஸ்மைல்' என்ற புதிய திட்டத்தின் துவக்க விழா ரயில்வே காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் தலைமையில் நடைபெற்றது.  காணாமல் போன மற்றும் பெற்றோரை பிரிந்துள்ள குழந்தைகளை கண்டுபிடித்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கும் வகையில் இந்த சிறப்பு நடவடிக்கை துவக்கப்படுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருச்சி கோட்ட ரயில்வே காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசும்போது...

காணமல் போகும் குழந்தைகள், வீட்டை விட்டு ஓடிவரும் குழந்தைள், கொத்தடிமைகளாக சில இடங்களில் பணியாற்றும் குழந்தைகள், அதே போல் குழந்தை தொழிலாளர்கள் போன்ற குழந்தைகளை மீட்டு அவர்களை பாதுகாப்பாக பெற்றோரிடம் அல்லது குழந்தைகள் காப்பகத்தில் சேர்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கம்.

இன்று முதல் வரும் 15 ஆம் தேதி வரை அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட 24 காவல் நிலையங்கள், 6 புறக்காவல் நிலையங்கள் என மொத்தம் 30 காவல் நிலையங்களில் குழந்தை உதவி மையங்களை அமைத்து அங்கு குழந்தை உதவி மைய அலுவலர்களை நியமிக்க உள்ளோம். இதன் மூலம் காணமல் போன குழந்தைகளை கண்டுபிடிப்பதோடு, குழந்தைகள் கடத்தலை தடுத்து நிறுத்த முடியும்.

அடுத்த 15 நாட்களில் 24 மணி நேரமும் இந்த திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து கூடுதல் கவனம் செலுத்த உள்ளோம். இதற்கென நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் இதில் முழு கவனம் செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடத்தில் 2183 குழந்தைகள் மீட்கப்பட்டு 90 சதவீத குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மற்ற குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com