’நாளைய முதல்வர்’ என 100 அடி நீள பேனர் - உடனடியாக அகற்றச் சொன்ன ஓபிஎஸ்..!

’நாளைய முதல்வர்’ என 100 அடி நீள பேனர் - உடனடியாக அகற்றச் சொன்ன ஓபிஎஸ்..!
’நாளைய முதல்வர்’ என 100 அடி நீள பேனர் -  உடனடியாக அகற்றச் சொன்ன ஓபிஎஸ்..!

தேனியில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை வரவேற்று நாளைய முதல்வர் என வைக்கப்பட்ட 100 அடி நீள கட்-அவுட்டை கழற்றச் சொன்ன துணை முதல்வர்.

தேனி அருகே உள்ள நாகலாபுரத்தில் நடமாடும் நியாயவிலை கடை திட்டத்தை துணை முதல்வர் பன்னீர்செல்வம் இன்று துவக்கி வைத்தார். இந்த விழாவிற்கு அவர் வரும்போது தேனி பங்களாமேடு அருகே நாளைய முதல்வரே என்ற வாசகத்துடன் கூடிய 100அடி நீள கட்-அவுட்டை வைத்து வரவேற்க கட்சியினர் குவிந்து இருந்தனர்.


அவர் அங்கே வந்தபோது அவரை வரவேற்கும் விதமாக கட்சியினர் பட்டாசுகள் வெடித்து ஆரவாரம் செய்தனர் .அப்போது நாளைய முதல்வரே கட்-அவுட்டை கண்ட அவர் உடனே அகற்றுமாறு கட்சியினரை வலியுறுத்தியதை அடுத்து உடனடியாக கட்-அவுட் அகற்றப்பட்டது.

 
பின்னர் நடைபெற்ற விழாவில் நடமாடும் நியாயவிலை கடை திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்து பயனாளிகளுக்கு 4 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழா முடிந்த பின்னர் செய்தியாளரை சந்தித்து அவர், இன்று பிற்பகலில் சென்னை செல்ல உள்ளதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com