கமுதி: இபிஎஸ் படத்தை கிழித்தெறிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

கமுதி: இபிஎஸ் படத்தை கிழித்தெறிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
கமுதி: இபிஎஸ் படத்தை கிழித்தெறிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

கமுதியில் இபிஎஸ் படத்தை கிழித்தெறிந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ்ஸை அவமதிக்கும் விதமாக அவர் மீது பாட்டிலை வீசி இபிஎஸ் ஆதரவாளர்கள் அராஜகத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள், இபிஎஸ்-க்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர், இபிஎஸ் படத்தை கிழித்தெறிந்தும் சுவரில் எழுதி இருந்த இபிஎஸ் பெயரை அழித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு இபிஎஸ்-க்கு எதிராகவும், ஒபிஎஸ்-க்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com