\
துயரத்தை உணர்கிறேன்: மீனவர்கள் மத்தியில் ஓ.பி.எஸ் பேச்சு

துயரத்தை உணர்கிறேன்: மீனவர்கள் மத்தியில் ஓ.பி.எஸ் பேச்சு

துயரத்தை உணர்கிறேன்: மீனவர்கள் மத்தியில் ஓ.பி.எஸ் பேச்சு
Published on

உங்களில் ஒருவனாக துயரத்தை உணர்கிறேன் என மீனவர்கள் மத்தியில் பேசிய ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட பிரிட்ஜோ படுகொலையை கண்டித்து தங்கச்சிமடத்தில், 6ஆவது நாளாக போராட்டம் நீடித்துவருகிறது. மீனவ இளைஞர் பிரிட்ஜோவின் உடலை பெற மறுத்து நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில், அவரது குடும்பத்தினரும் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், தங்கச்சிமடத்திற்கு சென்ற தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரிட்ஜோ குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். பின்னர் மீனவர்கள் மத்தியில் பேசிய பன்னீர்செல்வம் மீனவர்களைப் பாதுகாப்பது மத்திய அரசின் கடமை என்றும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்றும் கூறினார். உங்களில் ஒருவனாக துயரத்தை உணர்கிறேன். அதிமுக எப்போதும் மீனவர்களுக்கு துணையிருக்கும் என்றும் பன்னீர் செல்வம் கூறினார். பிரதமரைச் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்துவதாகவும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com