நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு - பாடல் மூலம் தன் நிலையை வெளிப்படுத்திய ஓ.பி.எஸ்

நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு - பாடல் மூலம் தன் நிலையை வெளிப்படுத்திய ஓ.பி.எஸ்
நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு - பாடல் மூலம் தன் நிலையை வெளிப்படுத்திய ஓ.பி.எஸ்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனது நிலையை கண்ணதாசன் பாடல்வரிகளைக் கொண்டு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கினார்.

மத்திய அரசின் வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி முதல்வர் கொண்டு வந்த தனித் தீர்மானத்தை எதிர்த்து அதிமுக வெளிநடப்பு செய்தது. அப்போது அவை முன்னவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், ஓ.பன்னீர்செல்வம் குறித்து சில கருத்துகளை முன்வைத்தார். பின்னர் அதிமுகவினர் மீண்டும் அவைக்குள்ளே வந்தபோது, தாம் தெரிவித்த கருத்துகள் ஓ.பன்னீர்செல்வத்தின் மனதை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியிருந்தால், அவற்றை அவைக் குறிப்பிலிருந்து நீக்குமாறு சபாநாயகரிடம் கோரினார்.

அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், துரைமுருகன் மீது தமக்கு தனிப்பட்ட முறையில் மரியாதை உள்ளதாகக் குறிப்பிட்டார். தம்முடைய தனிப்பட்ட நிலையை எண்ணும்போது ஒரு பாடல் வரி நினைவுக்கு வருவதாகவும், அது. நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு, இடையே இறைவனின் சிரிப்பு இதுதான் என் நிலை என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com