OP Ravindranath - TVK vijay
OP Ravindranath - TVK vijayPT

விஜய் கட்சியுடன் கூட்டணி? புதிய அமைப்பைத் தொடங்கிய ஓ.பி.ஆர் - என்ன காரணம்? விரிவான பின்னணி!

தற்போது ’ OPR கரம் கோர்ப்போம்’ என்கிற புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளார். அவரின் பிறந்தநாளான நேற்று அதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
Published on

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்ஸின் மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத்,’ OPR கரம் கோர்ப்போம்’ என்கிற புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளார்..,அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு அரசியலில் ஒதுங்கியே இருந்த ரவீந்திரநாத் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது புதிய அமைப்பைத் தொடங்கியிருக்கிறார்.

ஓ.பி.ரவீந்திரநாத் அதிமுகவில் பல முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தவர். 2019 நாடாளுமன்றத் தேர்தலில், தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பியானார். தமிழ்நாட்டில் மற்ற அனைத்துத் தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றிபெற, தேனியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. ஆனால், அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடிக்க, நீதிமன்றத்துக்குச் சென்றார் ஓ.பி.எஸ்.

தொடர்ந்து, 2022 ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழுவில் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார்..அதனைத் தொடர்ந்து, ரவீந்திரநாத் குமாரை அதிமுக எம்.பியாக அங்கீகரிக்கக் கூடாது என நாடாளுமன்ற சபாநாயகருக்கு, எடப்பாடி தரப்பினர் கடிதம் எழுதினர்..,தொடர்ந்து, தேர்தல் மனுவில் தவறான தகவல்களைக் குறிப்பிட்டதாக அவரின் எம்.பி பதவியும் பறிபோனது.

NGMPC059

ஓ.பி.ரவீந்திரநாத் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது...தொடர்ந்து, அவரின் எம்.பி பதவி தப்பித்தது..,அடுத்த சில மாதங்களில் பதவிக்காலம் முடிவடைந்தது..,2024 தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிடவில்லை..அவரின் தந்தை ஓ.பன்னீர்செல்வம் இராமநாதபுரத்தில் போட்டியிட்டார்..,

கேரளா: “பிரியாணியும் பொறிச்ச கோழியும் வேணும்” - கோரிக்கை வைத்த சுட்டி; அமைச்சர் சொன்ன அசத்தல் பதில்

அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட பிறகு தனி அணியாகச் செயல்பட்டார் ஓ.பி.எஸ்.., அவருடன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன், பெங்களூர் புகழேந்தி, மருது அழகுராஜ் உள்ளிட்ட பலர் இணைந்து செயல்பட்டனர்...தமிழ்நாடு முழுவதும் நிர்வாகிகளை நியமித்து ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தினர். ஒருசில கூட்டங்களில் கலந்துகொண்டதைத் தவிர, பெரும்பாலும் ஒதுங்கியே இருந்தார் ரவீந்திரநாத்.

இது ஒருபுறமிருக்க, அடிப்படையில், விஜய் ரசிகரான அவர், விஜய் கட்சி ஆரம்பித்தது தொடங்கி அவரின் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் முதல் ஆளாக வாழ்த்துச் சொன்னார்..,இராமநாதபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரவீந்திரநாத், ``விஜய் கட்சி தொடங்கியது அவரது அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல ஒரு பாதையை அவர் வகுத்து தந்தால் அவருடன் இணைந்து செயல்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்’’ எனவும் கூறியிருந்தார். அதனால், அவர் விஜய் கட்சியில் இணையப் போகிறார் என்கிற தகவல்கள் வெளியாகின.

“பதவிக்காக நாம இந்த இயக்கத்திலே இல்லை. உணர்வுக்காக, உழைப்பிற்காக, மக்களின் நலனிற்கு பாடுபடுவதற்காக இருக்கிறோம்” - பாஜக நிர்வாகி சரத்குமார்!

ஆனால், தற்போது ’ OPR கரம் கோர்ப்போம்’ என்கிற புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளார். அவரின் பிறந்தநாளான நேற்று அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். ஐந்து கரங்கள் கோர்த்த இலச்சினையையும் வெளியிட்டிருக்கிறார். அதேபோல, ``தமிழ்நாட்டின் இளைஞர்கள் வேலையின்மை , சுகாதார நெருக்கடிகள், சுற்றுப்புறச் சிக்கல்கள், உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். இந்தச் சிக்கல்கள் அவற்றின் வளர்ச்சி மற்றும் திறனைத் தடுக்கின்றன. இவற்றை மேற்கொண்டு மாற்றத்திற்கான ஒரு புதிய முயற்சி’’ என அமைப்பு தொடங்கப்பட்டதற்கான நோக்கத்தையும் கூறியிருக்கிறார். அதேபோல, அறிவித்திருக்கிறார்.

அதன்படி, இரத்ததானத்தை முன்னிறுத்தி, உயிர்ச்சாரல், வேலைவாய்ப்பைக் குறிக்கும் விதமாக உயர்தொழில், சுற்றுழ்ச்சூழல் பாதுகாப்புக்காக,. நிலச்சாரல், விளையாட்டை மேம்படுத்தும் விதமாக, வெற்றிச்சிறகு என நான்கு இலக்குகளையும் முன்வைத்திருக்கிறார். அமைப்பில் இணைவதற்கான இணையதளம், எண்களையும் அறிவித்திருக்கிறார் அவர்.

இந்தநிலையில், ‘’ விஜய் கட்சியில் நேரடியாக இணையாவிட்டாலும், எதிர்காலத்தில் விஜயுடன் கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்கிறார்கள், விபரம் அறிந்தவர்கள்..,

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com