ஊட்டி கோடை விழா: கோத்தகிரியில் கோலாகலமாக தொடங்கிய காய்கறி கண்காட்சி

ஊட்டி கோடை விழா: கோத்தகிரியில் கோலாகலமாக தொடங்கிய காய்கறி கண்காட்சி
ஊட்டி கோடை விழா: கோத்தகிரியில் கோலாகலமாக தொடங்கிய காய்கறி கண்காட்சி

நீலகிரி மாவட்டத்தின் நடைபெறும் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரியில் இன்று 11-வது காய்கறி கண்காட்சி துவங்கியது.

நீலகிரியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கோடை விழாவின் முதல் நிகழ்வான 11வது காய்கறி கண்காட்சி மே 7,8 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் இன்று துவங்கியது.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், மலைத்தோட்ட காய்கறி விவசாயிகளின் வாழ்வாதரம் மேம்படவும் நடத்தப்படும் இந்த கண்காட்சியில் கோவை, திருவண்ண்மலை, தர்மபுரி, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து வருகை தந்திருந்தனர்.

தோட்டக்கலை துறையினர் சார்பில் கத்தரிக்காய், பூசணிக்காய், கேரட்,பீட்ரூட்,கேரட், குடைமிளகாய்,போன்ற காய்கறிகளைக் கொண்டு யானை, மயில், கிளி, சேவல், பான்டா கரடி, வரிக் குதிரை, மீன் போன்ற உருவங்களை உருவாக்கி இருந்தது காண்பவர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது,

இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக பல்வேறு காய்கறிகளால் உருவான பிரமாண்ட ஒட்டக சிவிங்கி 1500 கிலோ கேரட் மற்றும் முள்ளங்கியால் உருவாக்கப்பட்டிருந்தது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது,

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com