ஊட்டி மலை ரயில் இன்று முதல் 3 நாட்களுக்கு ரத்து

ஊட்டி மலை ரயில் இன்று முதல் 3 நாட்களுக்கு ரத்து
ஊட்டி மலை ரயில் இன்று முதல் 3 நாட்களுக்கு ரத்து

ஊட்டி மலை ரயில் இன்று முதல் மூன்று நாள்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை மற்றும் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வந்த மலை ரயில் திடீரென நடுவழியில் பழுதாகி நின்றது.

இதன் காரணமாக குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு புறப்படவேண்டிய மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. பழுதாகி நின்ற ரயிலில் இருந்த பயணிகள் மாற்று ரயில் மூலம் மீட்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com