உதகை: ஆ.ராசாவின் வாகனத்தை முறையாக சோதனை செய்யவில்லை என புகார் - பறக்கும்படை அதிகாரி மீது ஆக்‌ஷன்!

உதகையில் ஆ.ராசாவின் வாகனத்தை முறையாக பரிசோதனை செய்யாத பறக்கும்படை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
Vehicle check
Vehicle checkpt desk

செய்தியாளர்: N.ஜான்சன்

கடந்த சில நாட்களுக்கு முன் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்த ஆ.ராசாவின் வாகனத்தில், சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமசந்திரன் மற்றும் திமுக மாவட்டச் செயலாளர் ஆகியோர் பயணித்துள்ளனர். அப்போது பறக்கும் படை குழு அதிகாரி கீதா என்பவர் (குழந்தைகள் நல திட்ட அலுவலர், கோத்தகிரி) தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவின் வாகனத்தை சோதனை செய்தார். ஆனால் அவர் முறையாக சோதனை மேற்கொள்ளவில்லை என்று புகார் எழுந்தது.

Vehicle check
நிறுத்திவைக்கப்பட்ட திமுக ஆ.ராசா, அதிமுக லோகேஷ் வேட்புமனுக்கள்.. அடுத்தடுத்து நடந்த ட்விஸ்ட்!
Vehicle Check
Vehicle Checkpt desk

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் தேர்தல் அலுவலர்கள் மேற்கொண்ட விசாரணையில் முறையாக வாகன பரிசோதனை மேற்கொள்ளவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 134-ன் கீழ் (RP Act 1951 section 134)  கீதாவை 30.03.2024 (இன்று) முதல் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com